
மறைந்த மூத்த தமிழ் சினிமா நடிகர் முரளி அவர்களின் உறவினர் தான் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமான பிரபல நடிகர் டேனியல் பாலாஜி. இவருடைய தனித்துவமான நடிப்பு திரையுலகில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது என்றால் அது சற்றும் மிகையல்ல என்றே கூறலாம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் பயணித்து வரும் டேனியல் பாலாஜி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "அரியவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த சூழலில் அவருடைய மறைவு என்பது திரை உலகிற்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது அவருடைய நடிப்பில் இன்னும் வெளிவராமல் இருக்கும் சில படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலகட்டத்தில் வெளியாக இருந்த "காட்மேன்" என்கின்ற ஒரு வெப் சீரியஸில் அவர் நடித்திருந்தார். மதம் சார்ந்த பல சர்ச்சைகளை இந்த திரைப்படம் கிளப்பிய நிலையில் அந்த இணைய தொடர் இறுதி வரை வெளியாகாமல் போனது.
அதேபோல "இரவு" மற்றும் "மானே தேனே பேயே" என்கின்ற இரு திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இன்றளவும் அந்த இரு திரைப்படம்ங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான "பேய் பசி" என்கின்ற திரைப்படத்திலும் டேனியல் பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் கூட வெளியானது. "நான் அப்பாடக்கர்" என்கின்ற அந்த பாடலை யுவன் தனது U1 ரெகார்டஸ் மூலம் வெளியிட்டிருந்தார். சுமார் ஐந்து ஆண்டுகளாக இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது.
Premalu OTT Release Date: சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.