
இந்த 2024ம் ஆண்டு துவங்கியதில் இருந்து பெரிய அளவில் கோலிவுட் படங்கள் ஹிட்டடிக்கவில்லை. ஆனால் மோலிவுட் எனப்படும் மலையாள திரைப்படங்கள் Box Office வெற்றி படங்களாக மாறிவருகின்றது. ஆகவே இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் கோலிவுட் படங்களாவது சூப்பர் ஹிட் படங்களாக மாறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ள படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
இந்த 2024ம் ஆண்டில் அதிக திரைப்படங்களில் நடித்தும், அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகின்ற கலைஞர் தான் ஜீவி பிரகாஷ் குமார். அவருடைய நடிப்பில் வருகின்ற ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் "கள்வன்". இந்த திரைப்படத்தை டி.வி சங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி புகழ் தீனா நடித்துள்ளார்.
அதே போல நாயகியாக இவானா நடிக்க மிக முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா நடித்துள்ளனர். அதேபோல ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் ஏப்ரல் 11ம் "டியர்" என்கின்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்
இந்த ஏப்ரல் மாதத்தில் இரு "கமர்சியல் அரசர்கள்" நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளது அனைவரும் அறிந்ததே. வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி தனது அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தை வெளியிட இருக்கிறார். அதேபோல பிரபல நடிகர் விஷால் அவர்கள், இயக்குனர் ஹரி இயக்கத்தில் "ரத்னம்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படமும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் அடுத்தபடியாக பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள "இங்க நான் தான் கிங்கு" என்கின்ற படமும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக தரமான பல நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் மிகச் சிறந்த நடிகராக திகழ்ந்து வருகின்றார் விஜய் ஆண்டனி. அவரும் பிரபல நடிகை மிர்னாலினியும் "ரோமியோ" என்கின்ற திரைப்படத்தில்நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் 11ம் தேதி இப்படம் வெளியாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.