Saranya Ponvannan : கார் பார்க்கிங்கால் ஏற்பட்ட தகராறு... நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்

By Ganesh A  |  First Published Apr 1, 2024, 12:13 PM IST

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழ் திரையுலகில் கமல்ஹாசனின் நாயகன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். இதையடுத்து ஹீரோயினாக பல்வேறு படங்களில் நடித்த சரண்யாவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது அவர் அம்மா வேடங்களில் நடித்த படங்கள் தான். தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

இந்த நிலையில், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நடிகை சரண்யா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் ஸ்ரீதேவி தான் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, நேற்று இரவு மருத்துவமனை செல்வதற்காக தனது காரை எடுக்க முயன்றுள்ளார் ஸ்ரீதேவி, அப்போது கேட்டை திறக்கும்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் காரின் மீது இடிப்பதுபோல் சென்றுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Thug Life : துல்கருக்கு பதில் சிம்பு... ஜெயம் ரவிக்கு பதில் இவரா? தக் லைஃப் பட வாய்ப்பை தட்டிதூக்கிய மாஸ் ஹீரோ

இதனால் நடிகை சரண்யாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சரண்யாவின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியின் வீட்டிற்குள்ளேயே சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் ஸ்ரீதேவி தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஸ்ரீதேவி.

தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த புகார் மனுவில் ஸ்ரீதேவி குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் இருப்பதாகவும் ஸ்ரீதேவி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் வெளியான பார்க்கிங் படத்தை போல் இந்த சம்பவம் இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Atlee : அல்லு அர்ஜுன் படத்துக்காக சூப்பர்ஸ்டார் பாணியில் டீல் பேசி... அட்லீ போட்ட கண்டிஷன் - ஆடிப்போன டோலிவுட்

click me!