
தனது வசீகரமான குரல் வளத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமீஸ், பஞ்சாபி, ஒரியா என பல மொழிகளில் பின்னணி பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தனது பாடல்களுக்காக தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் வெற்றிகரமான பாடகிகளில் ஸ்ரேயே கோஷல் முக்கியமானவர்.
ஸ்ரேயா கோஷல் தனது சிறு வயது நண்பரான ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி கடந்த 2021-ம் ஆண்டு தேவ்யான் என்ற மகன் பிறந்தார். ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமா பின்னணிப் பாடலின் ராணியாக இருக்கும் நிலையில், அவரின் கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா வணிக உலகில் ஒரு முக்கிய நபராக உள்ளார்.
ஆம். Truecaller செயலின் உலகளாவிய தலைவராக உள்ளார். ஷிலாதித்யா ஏப்ரல் 2022 முதல் Truecaller இன் உலகளாவிய தலைவராக இருந்து வருகிறார். Truecaller இன் ஆண்டு அறிக்கையின்படி, ஜனவரி முதல் டிசம்பர் 2023 வரை சுமார் ரூ. 1406 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. ட்ரூகாலர் 374 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது, இந்தியா அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும்.
ஷிலாதித்யா முகோபாத்யாயா வணிக மேம்பாடு, மொபைல் பயன்பாடுகள், மென்பொருள் திட்ட மேலாண்மை, தயாரிப்பு மேலாண்மை மற்றும் ஆட்டோமேஷன் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணராக உள்ளார் என்று அவரது LinkedIn புரொஃபைல் கூறுகிறது. இதற்கு அவர் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SaaS நிறுவனமான CleverTap இல் விற்பனை இயக்குனராகவும் பின்னர் விற்பனையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
ஸ்ரேயா கோஷலும் ஷிலாதித்யாவும் 10 வருடங்கள் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு நண்பரின் திருமணத்தின் போது ஷிலாதித்யா தன்னிடம் புரோபஸ் பண்ணியதாக ஸ்ரேயா கோஷல் கூறியிருந்தார். மேலும் சமீபத்தில் அவர் தனது கணவரை ஆத்ம துணை என்று கூறியிருந்தார்.
மும்பையில் 6 ஃபிளாட்களை வாங்கிய அபிஷேக் பச்சன்.. இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..
ஸ்ரேயா கோஷலின் கணவர் இரண்டு ஸ்டார்ட்அப்களை நிறுவியுள்ளார்: Hipcask என்ற செயலி, இது பயனர்களுக்கு ஒயின் சேகரிப்புகளைத் தேர்வுசெய்ய உதவுகிறது மற்றும் சிறு வணிகங்களுக்கான கட்டணப் பயன்பாடான Pointshelf என்ற செயலியையும் அவர் தொடங்கி உள்ளார்.
5 முறை தேசிய திரைப்பட விருது பெற்ற ஸ்ரேயா கோஷல், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு 180-185 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.