
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் "மாஸ்டர்". இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், கைதி அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
"பேட்ட" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், ஒரு சில காட்சிகளே நடித்திருந்தாலும் தனது அழகால் ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார்.
விதவிதமான கவர்ச்சி உடைகளில் மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதியின் ஹீரோயின் என்பதால் மாளவிகா மோகனின் அனைத்து ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தனது அசத்தல் அழகால் தமிழக ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள மாளவிகா மோகனனின் இந்த கவர்ச்சி போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுவரை விதவிதமான மார்டன் உடைகளிலும், புடவையிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த மாளவிகா மோகனன். இந்த முறை பொங்கல் விருந்தாக பாவாடை, தாவணியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கறுப்பு நிற உடையில், காட்ட கூடாத இடத்தில் டாட்டூவை காட்டி.... ரசிகர்களை மயக்கும் அஜித் பட நடிகை... வைரலாகும் போட்டோஸ்...!
பிங்க் நிற ஜாக்கெட், தாவணி, பச்சை நிற பாவாடையில் பார்ப்பதற்கு அச்சு அசலாக கிராமத்து பெண் போலவே இருக்கும் மாளவிகாவின் க்யூட் போட்டோஸ் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: முப்பரிமாணத்தில் மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டும் ஹாட் போட்டோ... கவர்ச்சி நடிகையின் கிளாமரால் ஓவர் லோடாகும் இன்டர்நெட்...!
அதிலும் மாளவிகா காதில் உள்ள ஜிமிக்கி கம்மலை பார்த்து ரசிகர்கள் பலரும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாங்கன்ன பார்த்துக்கோங்க. அப்படியொரு சொக்க வைக்கும் அழகில் பொங்கல் பரிசாக மாளவிகா மோகனன் தனது போட்டோஸை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.