கங்கனா எல்லாம் டூப்பு... அரவிந்த் சாமி தான்பா டாப்பு... "தலைவி" டீசரில் கெத்து காட்டும் தலைவர்...!

Published : Jan 17, 2020, 03:57 PM IST
கங்கனா எல்லாம் டூப்பு... அரவிந்த் சாமி தான்பா டாப்பு... "தலைவி" டீசரில் கெத்து காட்டும் தலைவர்...!

சுருக்கம்

மேலும் அரவிந்த் சாமியின் பர்ஸ்ட் லுக் டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை பார்க்கும் பலரும் கங்கனா ரனாவத் தோற்றத்தை விட அரவிந்த் சாமியின் தோற்றம் கச்சிதமாக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல். விஜய் படமாக எடுத்து வருகிறார். அதற்கு "தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக ப்ரியாமணியும் நடிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: அச்சு அசலாக எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி... வைரலாகும் "தலைவி" படத்தின் பர்ஸ்ட் லுக்...!

இதற்கு முன்னதாக கங்கனா ரனாவத் ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. பார்ப்பதற்கு கொஞ்சமும் ஜெயலலிதா போல் இல்லாத கங்கனாவின் முகம் மற்றும் உடல்வாகு ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். 

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று திடீரென ட்ரெண்டாகும் விஜய் ஹேஷ்டேக்... டுவிட்டரை தெறிக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்... எதற்காக தெரியுமா?

படம் வெளியாவதற்கு முன்பே நெகட்டீவ் விமர்சனங்கள் உருவானதால் பயந்து போன படக்குழு, தவறுகளை சரி செய்வதற்கான முயற்சிகளில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு "தலைவி" படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமியின் 2 கெட்டப்புகளின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. அரவிந்த் சாமி பார்ப்பதற்காக அச்சு அசலாக எம்.ஜி.ஆர். போலவே இருப்பதாக கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அந்த போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது. 

மேலும் அரவிந்த் சாமியின் பர்ஸ்ட் லுக் டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை பார்க்கும் பலரும் கங்கனா ரனாவத் தோற்றத்தை விட அரவிந்த் சாமியின் தோற்றம் கச்சிதமாக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர். இந்த படம் ஜூன் 26ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!