
வலிமை ஷுட்டிங்கில் அஜீத்தை சமாளிப்பதற்குள் அல்லு கழண்டு தில்லு இறங்கிவிடும் போலிருக்கிறதாம் வினோத்துக்கு. ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் வலிமை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென வினோத்தை அழைத்த அஜீத், சென்னையில ஷுட்டிங் வச்சுக்கலாமே என்றாராம். என்ன காரணமாக இருக்கும் என்று விசாரித்தால், அஜீத்தின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.
படப்பிடிப்பு முடிந்ததும் நேரே வீட்டிற்கு போய் அவரை பார்த்துக் கொள்ளலாமே என்று அஜீத் நினைத்த விஷயம் புரிந்தது. இதற்கிடையில், லைட்மேன்கள் குழு ஒன்று அஜீத்திடமே முறையிடக் கிளம்பிய தகவலும் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு முறை படப்பிடிப்பு நடக்கும் போதும் நீங்கள் வெளியூருக்கு போயிடுறீங்க. இதனால் எங்க பிழைப்பு பாதிக்கிறது.
சென்னையில் கட்டாயமாக ஷுட்டிங் வைங்க என்று கேட்டுக் கொள்ள நினைத்தார்களாம். ஆனால் கடவுளே வந்தாலும் அஜீத்தை சந்திப்பது அவ்வளவு ஈஸியில்லை அல்லவா? முயற்சி முதல் லெவலிலேயே நின்றுவிட்டது. இதை போராட்டம் உண்ணாவிரதம் என்று பெரிய விஷயமாக்க நினைத்தார்களாம் அதே லைட்மேன்கள். எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் வண்டியை சென்னைக்கு விடுங்க என்று கூறியிருக்கிறார் அஜீத்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.