'மாமனிதன்' படத்தில் இருந்து வெளியான ஏ ராசா பாடல்... மனதை கரைய வைத்த யுவன் ஷங்கர் ராஜா..!

Published : May 28, 2021, 05:23 PM IST
'மாமனிதன்' படத்தில் இருந்து வெளியான ஏ ராசா பாடல்...  மனதை கரைய வைத்த யுவன் ஷங்கர் ராஜா..!

சுருக்கம்

கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக ரிலீசாகாமல் இருக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள, 'ஏ ராசா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக ரிலீசாகாமல் இருக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள, 'ஏ ராசா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: 'ரோஜா' சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் பிரியங்காவா இது? குட்டை டவுசர் கவர்ச்சியில்.. சூடேற்றிய போட்டோஸ்
 

’தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப்பின் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் ’மாமனிதன்’. இப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இப்படத்திலும் நடித்துள்ளார். கம்மட்டிப் பாடம் படத்தில் நடித்த மணிகண்டனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக இப்படத்தில் நடித்திருக்கிறார். தேனி, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள மாமனிதன் 2019 ஆம் ஆண்டே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை ஜவ்வு மிட்டாய் போல் ரிலீஸ் குறித்த தகவல் இழுத்து கொண்டே செல்கிறது.

மேலும் செய்திகள்:கணவர் கொடுத்த முத்தத்தை கண் மூடி ரசிக்கும் காஜல் அகர்வால்..! வைரலாகும் போட்டோஸ்..!
 

இந்த படத்திற்கு இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா என இருவரும் சேர்த்து இசையமைத்துள்ளனர். யுவனே இப்படத்தை தயாரித்தும் உள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு படத்தின் அனைத்து பணிகளும் சிறப்பாக நிறைவடைந்து விட்டாலும் இதுவரை எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்:விஜய் டிவியின் இரண்டு சூப்பர் ஹிட் சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள 'ஏ ராசா' பாடல்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். பா விஜய் இந்த பாடலை எழுதியுள்ளார்இந்த பாடலின் வீடியோவில் யுவன்சங்கர் ராஜா பாடிய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்த பாடலின் வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jana Nayagan: 'விஜய் நடிகர் மட்டுமில்ல, ஒரு எமோஷன்' - ரசிகர்களின் கண்களை குளமாக்கிய ஜனநாயகனின் அந்த 1 நிமிட காட்சி
Siragadikka Aasai : மனோஜை மடக்கிய விஜயா... கனகாவின் செயலால் ஷாக் ஆன மீனா, முத்து!