வைரமுத்து ஆசையில் மண்ணு விழுந்துடுச்சா..? ஓ.என்.வி அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

manimegalai a   | Asianet News
Published : May 28, 2021, 01:25 PM IST
வைரமுத்து ஆசையில் மண்ணு விழுந்துடுச்சா..? ஓ.என்.வி அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

கவிஞர் வைரமுத்துவிற்கு கேளராவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும்,  ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு இந்த விருது கொடுக்கப்படுவதாக, கேரள நடிகை பார்வதி, மற்றும் பாடகி ஆகியோர் விமர்சிக்க சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். இதை தொடர்ந்து அந்த அமைப்பு வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்குவது குறித்து பரீலிக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  

கவிஞர் வைரமுத்துவிற்கு கேளராவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும்,  ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு இந்த விருது கொடுக்கப்படுவதாக, கேரள நடிகை பார்வதி, மற்றும் பாடகி ஆகியோர் விமர்சிக்க சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். இதை தொடர்ந்து அந்த அமைப்பு வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்குவது குறித்து பரீலிக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: விஜய் டிவியின் இரண்டு சூப்பர் ஹிட் சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

மலையாளத்தில் சிறந்த கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அறியப்படும் ஓ.என்.வி.குறுப், பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, இம்முறை... வைரமுத்துவுக்கு வழங்க உள்ளதாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இவர் எழுதிய 'நாட்படு தேறல்' எங்கிற தொகுப்பில் இடம் பெற்ற, என் காதலா என்கிற பாடலுக்காக இவ்விருது வழங்கப்படுவதாக இருந்தது.

இந்த விருது வழங்கப்பட்டதை அறிந்த, வைரமுத்து தன்னுடைய மகிழ்ச்சியை, கவிதை மயமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் வைரமுத்துவின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பாதிக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதே போல் வைரமுத்துவுக்கு பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகை பார்வதி, மற்றும் சின்மயி போன்றோர் தன்னுடைய எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: சூர்யாவின் 40 படத்தை அவரது சகோதரர் கார்த்தி படத்தோடு ஒப்பிட்டு பேசிய இயக்குனர் பாண்டிராஜ்!
 

குறிப்பாக கேரள நடிகையான பார்வதி...  "ஓ.என்.வி அவர்களின் எங்களின் பெருமை. ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஒப்பிடமுடியாதவை. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் நிறைவடைந்துள்ளது. ஆனால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் கூறியிருந்தார். இதை தொடர்ந்து ஒரு சில சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை அழகில் ஸ்ரீதேவி விஜயகுமார்..! ஹீரோயின்களுக்கே சவால் விடும் போட்டோ ஷூட்!
 

இதை தொடர்ந்து ஓ.என்.வி விருது வழங்கும் அந்த அமைப்பு, வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக இருந்த ஓ.என்.வி விருது மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இப்படி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது, இந்த விருது கிடைத்த போது, பூரித்த மகிழ்ச்சியில் பதிவு போட்டு நன்றி தெரிவித்த, வைரமுத்துவின் ஆசையில் மண் விழுந்து விடுமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஓ.என்.வி அமைப்பு என்ன கூறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!