அப்பா கமலுடன் இணைந்து 'விக்ரம்' படத்தில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்? அவரே அளித்த நச் பதில்!

Published : May 27, 2021, 07:51 PM ISTUpdated : May 27, 2021, 07:52 PM IST
அப்பா கமலுடன் இணைந்து 'விக்ரம்' படத்தில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்? அவரே அளித்த நச் பதில்!

சுருக்கம்

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை வைத்து அதிரடி ஆக்ஷன் மற்றும் அரசியல் சம்பந்தமான கதை களத்தை எடுக்க தயாராகியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தீயாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், அதற்க்கு அவரே பதிலளித்துள்ளார்.  

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனை வைத்து அதிரடி ஆக்ஷன் மற்றும் அரசியல் சம்பந்தமான கதை களத்தை எடுக்க தயாராகியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தீயாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், அதற்க்கு அவரே பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுதியாகவே உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, வெறித்தனமாக வெளியான டீசர் என்றும் கூறலாம். அரசியலில் பிசியாக இருந்த கமல்ஹாசன், தன்னுடைய கட்சி... சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், அரசியல் வேலைகளை, கவனித்து கொண்டே... திரைப்படத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்த தயாராகியுள்ளார்.

எனவே கொரோனா இரண்டாவது அலை, தணிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இடைப்பட்ட இந்த நேரத்தில், லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையிலும் சில மாற்றங்களை செய்ய கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, 'விக்ரம்' படத்தில், நடிக்க உள்ள முக்கிய நடிகர் பற்றி விவரம் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகரான பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு  மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸ் இணைந்து இருப்பதாகவும் இவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆண்டனி வர்கீஸ் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் , அப்போது அவர் மலையாள படங்களில் படு பிசியாக இருந்ததால் இந்த வாய்ப்பு கை நழுவியது. மாஸ்டரில் விட்டாலும், 'விக்ரமை' மிஸ் செய்யவில்லை. இதுகுறித்த அதிகார அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இந்த படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் 'விக்ரம்' படத்தில் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியின் மூலம் பதிலளித்துள்ள ஸ்ருதிஹாசன், இன்னும் 'விக்ரம்' படத்தில் நடக்க எனக்கு அழைப்பு வரவில்லை என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்