பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓ.என்.வி விருதா? வைரமுத்துவுக்கு எதிராக எதிரும்பிய நடிகை பார்வதி!

By manimegalai aFirst Published May 27, 2021, 6:00 PM IST
Highlights

கவிஞர் வைரமுத்துவிற்கு கேளராவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும்,  ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பல்வேறு தரப்பினரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை பார்வதி, தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
 

கவிஞர் வைரமுத்துவிற்கு கேளராவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும்,  ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பல்வேறு தரப்பினரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை பார்வதி, தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் சிறந்த கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அறியப்படும் ஓ.என்.வி.குறுப், பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, இம்முறை... வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய 'நாட்படு தேறல்' எங்கிற தொகுப்பில் இடம் பெற்ற, என் காதலா என்கிற பாடலுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கப்பட்டதை அறிந்த, வைரமுத்து தன்னுடைய மகிழ்ச்சியை, கவிதை மயமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் வைரமுத்துவின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பாதிக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதே போல் வைரமுத்துவுக்கு பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகை பார்வதி தன்னுடைய எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த பதிவில் இவர் கூறியுள்ளதாவது... "ஓ.என்.வி அவர்களின் எங்களின் பெருமை. ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஒப்பிடமுடியாதவை. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் நிறைவடைந்துள்ளது. ஆனால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் கூறியுள்ளார். 

pic.twitter.com/mud1ukJlqf

— Parvathy Thiruvothu (@parvatweets)

click me!