ஹாட் ஸ்டாரில் மாஸ் ஹிட்டடித்த ‘நவம்பர் ஸ்டோரி’... பட்டையைக் கிளப்பும் தமன்னா ஆக்டிங்...!

Published : May 27, 2021, 07:06 PM IST
ஹாட் ஸ்டாரில் மாஸ் ஹிட்டடித்த ‘நவம்பர் ஸ்டோரி’...  பட்டையைக் கிளப்பும் தமன்னா ஆக்டிங்...!

சுருக்கம்

நடிகை தமன்னா நடித்த 'நவம்பர் ஸ்டோரி' க்கு ‘பிளாக்பஸ்டர்’ வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தமிழ் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்...  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில், கடந்த வாரம் வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.  

நடிகை தமன்னா நடித்த 'நவம்பர் ஸ்டோரி' க்கு ‘பிளாக்பஸ்டர்’ வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தமிழ் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்...  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில், கடந்த வாரம் வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

தமிழில் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான இந்த வெப் தொடர், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.  இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள், இந்த தொடரின் கதை மற்றும் இதில் நடித்தவர்கள் நடிப்பை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.   இதன் கதைக்களம் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பும் பலரது பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள 'நவம்பர் ஸ்டோரி' கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் வெளியானதிலிருந்து, தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.  நடிகை தமன்னா மற்றும் ஜி.எம்.குமாரின் தந்தை-மகள் பாசம், அனுராதா மற்றும் கணேசனாக வாழ்ந்து நடித்துள்ளனர்.  ஆழமான கதை மற்றும் நச்சென்ற நடிப்பு, தமிழ் பார்வையாளர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 

'நவம்பர் ஸ்டோரியை' மில்லியன் கணக்கான இந்தியர்கள்  இந்த வார இறுதியில் பார்த்துள்ளனர்.  இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இந்த வெப் தொடரை ராம்  சுப்பிரமணியன் இயக்கியுள்ளார், ஆனந்த விகடன் குழுமம் தயாரித்துள்ளது.  7 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ்  தமிழ், இந்தி மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகி வருகிறது.  

மேலும் 'நவம்பர் ஸ்டோரிஸ்' வெப் தொடரில் புகழ்பெற்ற நடிகர்களான பசுபதி,  அருள் தாஸ் விவேக் பிரசன்னா, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த வெப் தொடர் மிகப்பெரிய ஒரு வெற்றியை தேசிய அளவில் ஈட்டித்தந்துள்ளது.   இது இந்தியாவின் தமிழ் டிஜிட்டல் தொடருக்கான ஒரு முக்கிய தருணத்தைக் உருவாக்கியுள்ளதைக் குறிக்கிறது.

இதுகுறித்து நடிகை தமன்னா கூறுகையில், “நவம்பர் ஸ்டோரி' பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத்தந்த பாராட்டு மற்றும் அன்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்ட்டுடன் வழங்கப்படும்போது அதற்க்கு முழு அளவில் மக்கள் வரவேற்பை வழங்குவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  மில்லியன்    கணக்கான மக்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும்போது, நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது' என்றார்.    

இயக்குனர் ராம் சுப்பிரமணியன், “நவம்பர் ஸ்டோரி எனக்கு ஒரு கனவுப் படைப்பாகும்.  மேலும் நாம் உருவாக்கியதை பலர் ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதை விட சிறந்த உணர்வு வேறு எதுவும் இல்லை. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த குழுவினர், என்னை முழுவதும் நம்பிய தயாரிப்பாளர்கள் அகியோர்களால் தான் என்னுடைய இந்த இயக்குனர் கனவு முழுவதுமாக நிறைவடைந்து வெற்றியை எட்டமுடிந்தது.  நாடு முழுவதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை அடைவது ஒரு எளிய சாதனையல்ல, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி. இதை மீண்டும் ஒரு முறை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. நவம்பர் ஸ்டோரியைப் பார்த்து கொண்டாடிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; இது ஒரு பெரிய வெற்றியை உருவாக்குகிறது, இது எனக்கு இன்னும் சிறப்பு. "  என கூறினார்.

தமன்னா இந்த தொடரில் இளம் கணினி ஹேக்கர் நெறிமுறையாளர் அனுராதாவாக நடித்துள்ளார், அவரது தந்தை அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளரான தனது தந்தை கணேசனை ஒரு பெண்ணின் இறந்த உடலுக்கு அருகாமையில் காண்கிறார். கொலை பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் அவர் இறங்கும்போது, யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் அடுத்தடுத்து வெளியே வருகிறது. 

தில்லார் படங்களை ரசித்து பார்க்கும், ரசிகர்களை தவிர்த்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தபடி இந்த தொடரை இயக்குனர் இயக்கியுள்ளார்.  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ்...  தற்போது, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி. மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?