யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற கமெண்ட் பண்றீங்க..! கடுப்பான கர்ணன் பட நடிகர்..!

By manimegalai aFirst Published May 28, 2021, 3:01 PM IST
Highlights

'கர்ணன்' படத்தில் அதிகாரத்தை காட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த, நட்ராஜை தொடர்ந்து பலர், அது அவரது நடிப்பு என்பதை கூட மறந்து தாறுமாறாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது கடுப்பாகி  original id la வந்து விமர்சியுங்கள் ... fake id la வராதீங்க என பதிவிட்டுள்ளார்.
 

'கர்ணன்' படத்தில் அதிகாரத்தை காட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த, நட்ராஜை தொடர்ந்து பலர், அது அவரது நடிப்பு என்பதை கூட மறந்து தாறுமாறாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது கடுப்பாகி  original id la வந்து விமர்சியுங்கள் ... fake id la வராதீங்க என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய’கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படும் போதிலும், 'கர்ணன்' வசூலில் சாதனை படைத்தது.

மாரி செல்வராஜின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் இந்த படத்தை வெகுவாக பாராட்டி வந்தனர். பலர் 'அசுரன்' படத்தை தொடர்ந்து, இந்த படத்திற்கும் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறி வருகிறார்கள். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு பொருந்தும் படி தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார் என அனைத்து தரப்பு ரசிகர்களும் கூறினார்.

குறிப்பாக கர்ணன் படத்தில் 'கண்ணபிரான்' என்கிற போலீஸ் அதிகாரியாக, தன்னுடைய அதிகாரத்தால் கிராமக்களை அடித்து துன்புறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ். இவர் வெளிப்படுத்தியது நடிப்பு என்பதை கூட மறந்து, பலர் அவரை திட்டினார்கள். அதே நேரத்தில் இவரது நடித்துக்கு வாழ்த்துக்களும் குவிந்தது. இதையடுத்து தன்னை யாரும் திட்டவேண்டாம் என, ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் நடராஜ்.

இந்நிலையில் படம் வெளியாகி இவ்வளவு நாட்கள் ஆகியும், பலர் ஓடிடி தலத்தில் வெளியான 'கர்ணன்' படத்தை பார்த்து விட்டு இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க  முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க..." என கூறியுள்ளார். 

ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க...

— N.Nataraja Subramani (@natty_nataraj)

click me!