
அஜித் நடிப்பில் வெளியான கடந்த 24 ம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தை, ஓடிடி-யில் வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவான அஜித்தின் வலிமை படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட இன்னும் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இரண்டு ஆண்டிற்கு பிறகு ரசிகர்களுக்கு டீரிட்..!
2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி உள்ள படம் வலிமை என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பைக் ரேஸ் காட்சிகள், சண்டைகாட்சிகள் சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் வலிமைக்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அஜித்தின் ரசிகர்களோ படத்தை கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
வசூல் சாதனை:
ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து ஓடி கொண்டிருக்கிறது.பிற மாநிலங்களிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
OTT-ல் ரீலிஸ்:
கடந்த மாதம் 24ஆம் தேதி ரீலிஸ் செய்யப்பட்ட, 25 நாட்கள் கழித்து வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் OTT தளத்தின் உரிமத்தை Zee 5-கைப்பற்றி, அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருந்தது. அதன்படி, வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பினை 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர் மூலம் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு:
இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் 2016 ஆம் ஆண்டு வெளியான தனது மெட்ரோ படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூறி, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஜேகே கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வலிமை திரைப்படத்தை, ஓடிடி-யில் வெளியிட எந்த தடை இல்லை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.