
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். இவர், 2020ம் ஆண்டு முதல் சாந்தனு என்பவரை காதலித்து டேட்டிங்கில் இருந்து வருகிறார். இதையடுத்து, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
ஸ்ருதிஹாசன் திருமணம்:
முன்னதாக, லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக நடிகரை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இதையடுத்து, தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாந்தனு, டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர்.
இந்நிலையில், சமீபத்தில் சாந்தனு அளித்த பேட்டி ஒன்றில்,
ஸ்ருதி ஹாசனுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் சாந்தனுவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சாந்தனு, நாங்கள் ஏற்கெனவே கிரியேட்டிவாக திருமணம் ஆனவர்கள். எங்களுடைய பந்தம் மிகவும் உறுதியானது. அதற்கு சாட்சியாக நாங்கள் எங்கள் தொழிலில் செய்யும் புதுமையான விஷயங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நாங்கள் இருவரும் இணைந்து புதுமையான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். எப்போதும், புதுமையாக யோசித்து இருப்பது தான் எங்கள் இருவருக்கும் ரொம்பவும் முக்கியம்.
இருப்பினும் திருமணம் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆகவே, இனி வரும் நாட்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.