
பிக்பாஸ் அல்டிமேட் :
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக்பாஸ் 5 சீசன்களும் நல்ல வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது ஓடிடிக்கு சென்றுள்ளது பிக்பாஸ். அல்டிமேட் என்கிற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
முந்தைய போட்டியாளர்கள் :
பிக்பாஸ் அல்டிமேட்டில் இதற்கு முந்திய ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தாடி பாலாஜி, ஸ்ருதி, சினேகன், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை, ஜூலி என மொத்தம் 14 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். பின்னர் கேபிஒய் சதீஸ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வைல்ட் கார்ட் மூலம் உல் நுழைந்துள்ளனர்.
கமல், வனிதா விலகல் :
கடந்த ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கி வந்த கமல் பிக் பாஸ் அல்டிமேட்டிலும் இடம் பெற்றிருந்தார். பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக விலகி விட்டார். முன்னதாக அல்டிமேட் வீட்டை மாஸ் அல்டிமேட்டாக ஆண்டு வந்த வனிதா தானாகவே வெளியில் சென்றுவிட்டார். செல்லும் முன் ஒரு குட்டி காலம் செய்து விட்டு தான் சென்றார். கமல் விலகியதை அடுத்து யாரும் எதிர்பாராத வண்ணம் சிம்பு அல்டிமேட் தொகுப்பாளராக மாறினார்.
மேலும் செய்திகளுக்கு... ரியாலிட்டியா இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா? மயங்கி விழுந்த பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்..
பிக் பாஸ் அல்டிமேட் அலப்பறைகள் :
ஸ்மோக்கிங் ரூம் சர்ச்சைகள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவியது. இதையடுத்து அபிராமி சூசைட் செய்ய முயன்றது. பாலாவின் அலட்சிய பேச்சு, நிரூப் பீப்பிள் ஜூலியை திட்டியது என அடுக்கடுக்காய் குழப்பங்கள் எகிறி வருகிறது. அதோடு பேப்பர் பிளாக்கை அடுக்கும் டாஸ்கில் வெயிலின் தாக்கம் தாங்காமல் பெண் போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் மயங்கி விழுந்து அதிற்சியை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த வார கோர்ட் டாஸ்க் :
இந்த வார டாஸ்காக வக்கீல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ருதி, தாமரை இருவரும் வக்கீலாக களமிறங்க ஜூலி குற்றவாளியாக நிற்கவைக்கபப்டுகிறார். இதில் தாமரை வக்கீல் கோட் அணிந்து உளறி தள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.