Aishwarya Rajinikanth : ஐஸ்வர்யாவின் புதுக் காதல் சக்சஸ் ஆனது... ரஜினி மகள் ஹாப்பியோ ஹாப்பி..!

By Asianet Tamil cinema  |  First Published Mar 23, 2022, 1:05 PM IST

Aishwarya Rajinikanth : நேற்று ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் என்கிற இந்தி ஆல்பம் பாடல் வெளியானது. இப்பாடலை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.


நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் தனது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். தனுஷ் உடனான பிரிவுக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, அடுத்தடுத்து தனது இசை ஆல்பங்களை இயக்கினார். இவர் இயக்கிய பயணி என்கிற இசை ஆல்பம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவித்தார் ஐஸ்வர்யா. ஏற்கனவே தமிழில் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ள அவர், இப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் இந்தி படத்துக்கு ‘ஓ ஷாதி சல்..’ என பெயரிடப்பட்டு உள்ளது. இது உண்மையான காதல் கதையை மையமாக வைத்து தயாராக உள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே நேற்று ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் என்கிற இந்தி ஆல்பம் பாடல் வெளியானது. இப்பாடலை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆல்பம் பாடலும் காதலை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் நடித்த ஷிவினுக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்த வீடியோ பாடல் வெளியான 9 மணிநேரத்தில் 19 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதைப் பார்த்து உற்சாகமடைந்த ஐஸ்வர்யா, அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “9 மணிநேரத்தில் 1.9 மில்லியன்.. நான் இந்தியில் இயக்கிய முசாபிர் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. என்னை நம்பி, எனக்கு சப்போர்ட் பண்ணிய எனது குழுவினருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Aishwarya : தனுஷுடனான பிரிவுக்கு பின் தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா... பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார்

1.9 million in 9 hours.. overwhelmed by the response for my Hindi directorial single ..thank you ⁦⁩ for believing in me n ⁦⁩ for the support n this is just your beginning!hope you all like it ! pic.twitter.com/bRvIcZUSUs

— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth)
click me!