Maamanithan : மாமனிதன் மே 6-ந் தேதி ரிலீசாகாது.... ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்

Ganesh A   | Asianet News
Published : Mar 23, 2022, 11:38 AM IST
Maamanithan : மாமனிதன் மே 6-ந் தேதி ரிலீசாகாது.... ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்

சுருக்கம்

Maamanithan : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாமனிதன் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார். 

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக இணைந்த படம் மாமனிதன். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். மேலும் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.

ரிலீசுக்கு தயாரான மாமனிதன்

மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார். அதன்படி வருகிற மே மாதம் 6-ந் தேதி மாமனிதன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். 

ரிலீஸ் தேதி மாற்றம்

இந்நிலையில், தற்போது மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டு உள்ளதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். இப்படம் மே 6-ந் தேதிக்கு பதில் மே 20-ந் தேதி வெளியிடப்படும் என்றும் தனது நடிப்பில் மே 20-ந் தேதி ரிலீசாக இருந்த விசித்திரன் படம் மே 6-ந் தேதி வெளியிடப்படும் என்றும் ஆர்.கே.சுரேஷ் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

மாமனிதன் தள்ளிப்போனது ஏன்?

மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பதிவில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் இப்படத்துக்காக தான் மாமனிதன் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. ஏனெனில் இந்த இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதற்கு அடுத்த வாரமே மாமனிதன் ரிலீசானால் வசூல் பாதிக்கும் என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்...   Gentleman 2 : ஜென்டில்மேன் 2 படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் நயன்தாரா... சாரி... ஜூனியர் நயன்தாரா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!