நடிகர் விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிட தடை... லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

By Ganesh A  |  First Published Apr 6, 2023, 7:58 AM IST

லைகா நிறுவனத்திடம் இருந்து பெற்ற தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் படம் தயாரிக்க மதுரை அன்புச்செழியனிடம் இருந்து ரூ. 21 கோடியே 29 லட்சத்தை கடனாக வாங்கி இருக்கிறார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்த நிலையில், லைகா நிறுவனம் இதனை ஏற்றுக்கொண்டு திருப்பி செலுத்தியது. இந்த கடன் தொகையை விஷால் திருப்பி செலுத்தும் வரை அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமைகளை லைகாவுக்கு வழங்குவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே கடனை திருப்பி செலுத்தாமல் விஷால் தனது தயாரிப்பில் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட்டார். உத்தரவாதத்தை மீறி நடந்துகொண்டதன் காரணமாக நடிகர் விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... watch : கருவேலங்காட்டு அரசியலை பேசும் ‘இராவணக் கோட்டம்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ரூ.15 கோடியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீட்டு தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சொத்துப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விஷால் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் விஷால் ரூ.15 கோடியை செலுத்த வேண்டும் என்கிற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். அதனை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி அமர்வில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை தியேட்டரிலோ அல்லது ஓடிடியிலோ வெளியிட தடைவிதித்து மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படியுங்கள்... watch : ஹாலிவுட் தரத்தில் இருக்கும் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே' மிஷன்-1 படத்தின் மெர்சலான டிரைலர்

click me!