
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ராஷ்மிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் இருந்தும் அடுத்தடுத்து அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ராஷ்மிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் புஷ்பா 2-வும் ஒன்று. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் அப்டேட்டும் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராஷ்மிகா பற்றிய அப்டேட்டாக தான் அது இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... காதலில் தோல்வி... சினிமாவில் வெற்றி! திருமணம் நின்றுபோன பின் தலைகீழாக மாறிய ராஷ்மிகாவின் வாழ்க்கை
ஆனால் இன்று காலை புஷ்பா 2 படக்குழு வெளியிட்ட அப்டேட்டை பார்த்து ராஷ்மிகா ரசிகர்கள் அப்செட் ஆகினர். அந்த அப்டேட்டில் புஷ்பா எங்கே என்கிற கேப்ஷனோடு, திருப்பதி ஜெயிலில் இருந்து தப்பிச்சென்ற புஷ்பா எங்கே என்கிற டயலாக்கும் இடம்பெற்று இருந்தது. மேலும் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி புஷ்பா 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த ராஷ்மிகா ரசிகர்கள், அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்காக வீடியோ வெளியிட்ட நீங்கள் ராஷ்மிகா பிறந்தநாளை மறந்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ராஷ்மிகாவை புஷ்பா 2 படக்குழு புறக்கணித்துவிட்டதாகவும் அவரது ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நேஷனல் கிரஷுக்கு பிறந்தநாள்... 26 வயதில் கோடீஸ்வரி ஆன ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.