'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் புதிய பட ஆடிஷனுக்கு ரோட்டில் வரிசை கட்டி நிற்கும் இளைஞர்கள் !

By manimegalai a  |  First Published Apr 4, 2023, 6:03 PM IST

அண்மையில் 'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தரப்பில் இருந்து, தன்னுடைய புதிய படத்திற்கு, நடிகர் - நடிகைகள் தேவை என அறிவிப்பு வெளியான நிலையில், ஆடிஷனில் கலந்து ஏராளமான   இளைஞர்கள் படையெடுத்து வருவதால்,  அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
 


அண்மையில் 'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தரப்பில் இருந்து தன்னுடைய புதிய படத்திற்கு, நடிகர் - நடிகைகள் தேவை என அறிவிப்பு வெளியான நிலையில், ஆடிஷனில் கலந்து கொள்ள ஏராளமான   இளைஞர்கள் படையெடுத்து வருவதால்,  அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்துவமான திரைப்படங்கள், மூலம் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான நேரம், பிரேமம் போன்ற படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த படங்களாகும்.

Tap to resize

Latest Videos

வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து... மிதந்து வருகிறேன்! 'விடுதலை' படத்தின் வெற்றிக்கு நன்றி கூறிய நடிகர் சூரி!

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், போன்ற ஹிட் படங்களை தயாரித்த... ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு  வெளியானதில் இருந்தே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படம் தமிழ் - மலையாளம் என இருமொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நான் அப்படி சொல்லவே இல்லை! முன்னாள் கணவர் நாகசைதன்யா டேட்டிங் குறித்து பரவிய வதந்திக்கு ரியாக்ட் செய்த சமந்தா!

மேலும் அண்மையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரோமியோ பிக்சர்ஸுடன் இணையும் தனது புதிய படத்திற்காக நடிகர்கள் தேவை என்றும், அதற்கான ஆடிசன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அந்த ஆடிசனில் 15 வயதிலிருந்து 55 வயது வரையிலான நடிக ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என, தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!

இந்த செய்தியினை அடுத்து, இப்படத்திற்கான ஆடிஷனில் தினமும் நூற்றுக்கணக்கானோர்  ரோட்டில் வரிசை கட்டி நின்று தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே போல் ஆடிஷன் நடக்கும் அலுவலகத்தின் முன்பு பல இளைஞர்கள் குவிந்து வருவதால் அந்த பகுதியே பரபரப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் ஆடிஷன் நடந்து வந்தாலும், மற்றொருபுறம்படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ரோமியோ பிக்சர்ஸ், இயக்குநர் ராஜுமோகன் இயக்கத்தில் “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

click me!