சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து மிகவும் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், 'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், வெளியாகி உள்ள திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற மக்கள் போராளியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய உரிமைக்காக போராடும் மக்கள் பற்றிய கருத்தை மையமாக வைத்தே இப்படமும் வெளியாகியுள்ளது.
துணைவன் என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், வெளியானது முதலே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அனைத்து திரையரங்குகளிலும்ஃஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது. திரைப்படத்திற்கு கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால் விடுதலை பட குழுவினர் அனைவருமே உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல் பாகமே வேற லெவல் வெற்றியை கண்டுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தில் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டுவிட்டதால், இன்னும் இரண்டு... மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதை தொடர்ந்து மற்றொருபுறம் விடுதலை படத்தில், மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார் சூரி.
'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நடிகர் சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... "அனைவருக்கும் வணக்கம்... மூன்று நாட்களாக, உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை, இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றி படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைதள நண்பர்கள், அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற, பத்திரிக்கை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் 'விடுதலை' குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
❤️❤️❤️🙏🙏🙏 pic.twitter.com/72TZvZpOhY
— Actor Soori (@sooriofficial)