"அவங்களுக்கு மட்டும் ஓட்டு போட்டுராதீங்க".. நெருங்கும் மக்களவை தேர்தல் - வைரலாகும் "மக்கள் செல்வனின்" வீடியோ!

Ansgar R |  
Published : Mar 19, 2024, 06:48 PM IST
"அவங்களுக்கு மட்டும் ஓட்டு போட்டுராதீங்க".. நெருங்கும் மக்களவை தேர்தல் - வைரலாகும் "மக்கள் செல்வனின்" வீடியோ!

சுருக்கம்

Vijaysethupathi : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பொதுவெளியில் பேசிய ஒரு பழைய வீடியோ இப்பொது இணையத்தில் மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி துவங்கும் இந்த மக்களவைத் தேர்தலானது, ஏழு கட்டங்களாக நடைபெற்று, ஜூன் மாதம் 1ம் தேதி நிறைவடைய உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் 4ம் தேதி வாக்குகள் என்னப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்திற்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சாரம் குறித்த தகவல்களை வெளியிட துவங்கியுள்ளனர். பிரதமர் மோடி அவர்களும் தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருகின்றார். 

பிணக்குவியல்.. ரத்த ஆறு.. மிரளவைக்கும் காட்சிகள்.. எதிரியோடு சண்டையிடும் "கங்குவா" - மிரட்டும் டீசர் இதோ!

இந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் மீண்டும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வெளியான அந்த வீடியோவில் "தேர்தல் வரப்போகிறது நீங்கள் வாக்களிக்கும் பொழுது தயவு செய்து நன்கு யோசித்து வாக்களியுங்கள்".

"நமக்கென்று ஒரு பிரச்சனை வருகிறது, அதை எதிர்த்து போராட வேண்டும் என்று கூறுபவனோடு இணைந்து போரிடுங்கள். ஆனால் நம் சாதிக்கோ, நம் மதத்திற்கோ பிரச்சனை ஏற்படுகிறது வாருங்கள் அதற்காக போரிடுவோம் என்று கூறுபவர்களோடு இணைய வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஊசி போட்டு நடிச்சுட்டு இருக்கேன்! கோவை சரளா stretcher-ல வராங்க! ஸ்ரீமன் நிலை இதான்.. கொந்தளித்த ரோபோ ஷங்கர்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!