
இந்த 2024 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பெரிய அளவில் எந்த கோலிவுட் திரைப்படமும் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெறாத நிலையில், மலையாள மொழியில் வெளியாகி இன்று உலக அளவில் சுமார் 200 கோடி ரூபாயை வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறி இருக்கிறது Manjummel Boys என்ற திரைப்படம்.
அதே போல பிரமயுகம், ப்ரேமலு போன்ற மலையாள படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரம் Manjummel Boys இயக்குனர் சிதம்பரத்திற்கு, இது இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும், இந்தியாவின் பல்வேறு மொழியை சேர்ந்த ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பெரிதும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி உலக அளவில் வெளியான Manjummel Boys திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், உலக அளவில் தற்போது 200 கோடி ரூபாயை அந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது. மலையாள திரையுலகில், உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்யும் முதல் படமாக Manjummel Boys மாறியுள்ளது.
விஷால் சொன்ன ஃபார்முலா
இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், ஒரு சினிமா தொடர்பான நிகழ்வில் பேசும்போது கூறிய சில கருத்துக்கள் குறித்து நெட்டிசன்கள் இப்பொது விவாதித்து வருகின்றனர். நடிகர் விஷால் வெளியிட்ட கருத்தின்படி "இனி திரைப்படம் எடுக்க வருபவர்கள், நான்கு அல்லது ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்க வர வேண்டாம்".
"அது மிகப்பெரிய நஷ்டத்தில் நான் போய் முடியும், இங்கு வெளியீட்டு வெகாத்திருக்கும் பெரிய படங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. ஆகவே குறைந்த முதலீட்டில் படம் எடுத்து தயாரிப்பார்கள் யாரையும் நோகடிக்க வேண்டாம்" என்று அவர் கூறியிருந்தார். ஆனால் Manjummel Boys திரைப்படம் 8 முதல் 9 கோடி ரூபாய் என்கின்ற பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, தற்போது உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆகவே படம் சிறியது, பெரியது என்பதை தாண்டி கதையே அதன் வெற்றியை தீர்மானிக்கின்றது என்று நெட்டிசன்கள் கூறி வந்திருக்கின்றனர்.
அதே போல கடந்த ஆண்டு தமிழில் புதுமுகங்களை கொண்டு வெளியான டைனோசர் என்ற படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிக பொருள் கொண்டு எடுக்கும் படங்கள் என்பதை தாண்டி, நல்ல கதையுள்ள படம் நிச்சயம் வெல்லும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.