ஹுகும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இரண்டாவது படத்தை உறுதி செய்த லெஜெண்ட் சரவணன்! வைரலாகும் டான்ஸ் வீடியோ!

By manimegalai a  |  First Published Aug 15, 2023, 2:35 PM IST

லெஜெண்ட் சரவணன், இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய நிலையில் தன்னுடைய இரண்டாவது படத்தின் அப்டேட் குறித்த தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 


தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன், தொழிலதிபர்  என்பதை தாண்டி தன்னுடைய கடை விளம்பரங்களில், மாடலாக தோன்றி ஆட்டம் பாட்டம் என பட்டையைக் கிளப்பினார். குறிப்பாக இவர் தன்னுடைய விளம்பர படங்களில், தமன்னா, ஹன்சிகா, போன்ற முன்னணி நடிகைகளுடன் ஆட்டம் போட்டது... விமர்சனத்திற்கு ஆளான போதிலும், அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்ததை போல்டாக செய்தார். இவரது இந்த அணுகுமுறையே பலரையும் வியக்க வைத்தது மட்டுமின்றி, இவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்று தந்தது.

Tap to resize

Latest Videos

அட்ரா சக்க... வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்..! 5-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

இவருக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு, இவரை ஒரு நடிகராகவும் மாற்றியது. தன்னுடைய முதல் படத்தை இவரே தயாரித்து நடித்தார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமாரான வசூலை பெற்றாலும், சூப்பரான விமர்சனங்களை பெற்றது. இந்த காலத்திற்கு தேவையான... முக்கிய சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், லெஜெண்ட் சரவணன் ஒரு விஞ்ஞானியாக நடித்திருந்தார்.  இந்த படத்தின் கதைக்களத்தை இன்னும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால், படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கும் என்பதே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் அடுத்தடுத்து பல படங்களின் கதைகளை கேட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் இவரது இரண்டாவது படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காமெடியில் மட்டும் அல்ல... சென்டெமெண்டாக நடித்து ரசிகர்களை அழ வைத்த வடிவேலுவின் 6 முக்கிய படங்கள்!

லெஜெண்ட் சரவணன் இன்று, 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை  கொண்டாடி, குழந்தைகளுக்கு இனிப்புகள் மட்டும் பரிசுகள் வழங்கினார். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஒரு குழந்தை லெஜெண்ட் சரவணனின் முதல் படம் பார்த்ததாகவும், அந்த படம் அருமையாக இருந்ததாகவும் கூறி அவரின் அடுத்த படம் குறித்த கேள்வியை முன்வைக்கிறது. இதற்கு பதில் அளித்த லெஜெண்ட் சரவணன், இவ்வளவு நாள் ஒரு நல்ல கதை அமைய வேண்டும் என்பதற்காக காத்திருந்ததாகவும் தற்போது அந்த கதை கிடைத்துவிட்டது எனவே விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தன்னுடைய அடுத்த படத்தை உறுதி செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' வெளியானதில் இருந்து இலங்கை திரையரங்கங்கள் ஹவுஸ் ஃபுல்! மாஸ் வரவேற்பு கொடுக்கும் ரசிகர்

மேலும் பெற்றோர்களை போல், நம் மீது அக்கறை காட்டுபவர்கள் யாரும் இல்லை அதனால் பெற்றோர்களையும், நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ள லெஜெண்ட் சரவணன், இந்த வீடியோவின் முடிவில் குழந்தைகளின் ஆசைக்காக மாஸாக டான்ஸ் ஒன்றையும் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

click me!