ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, 'ஜெயிலர்' படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம், உலக முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் திரையரங்கம் சென்று பார்த்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் 'ஜெயிலர்' படத்தை தன்னுடைய குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் திரையரங்கம் வரும் போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 'ஜெயலர்' படத்தை பார்த்து விட்டு, நெல்சன் திலீப் குமாரை அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறிய நிலையில், தற்போது கேரள முதல்வரும் பார்த்துள்ளார்.
undefined
'சீதா ராமம்' படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது! சந்தோஷத்தில் படக்குழு!
ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது.சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான இப்படம் 4 நாட்களில் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது. டார்க் காமெடி ஆக்ஷன் ஜர்னரில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர், ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளை பார்க்க முடிந்ததாக தலைவரின் ரசிகர்களும் மனநிறைவோடு கூறி வருகிறார்கள்.
மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி இந்த படம் 500 கோடி வசூல் கிளப்பில் கூடிய விரைவில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
Kerala CM Pinarayi Vijayan & Family at Lulu to watch 💥💥💥pic.twitter.com/r2hJnGAcY2
— Southwood (@Southwoodoffl)