மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. கண் கலங்கிய ஜாக்கி ஷெராஃப் - ஜெயிலர் பட மெமரிஸ்!

Ansgar R |  
Published : Aug 14, 2023, 10:05 PM ISTUpdated : Aug 14, 2023, 10:47 PM IST
மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. கண் கலங்கிய ஜாக்கி ஷெராஃப் - ஜெயிலர் பட மெமரிஸ்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகெங்கிலும் பலநூறு கோடி வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்த பிரபல நடிகர் ஜாக்கி ஒரு நெகிழ்ச்சியான தருணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலக அளவில் வெளியாகின திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த திரைப்படத்தில் இந்திய திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். குறிப்பாக மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள், கன்னட திரை உலக நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஜாக்கி ஷெராஃப் படபிடிப்பின் போது நடந்த ஒரு நிகழ்வு குறித்து தற்பொழுது மனம் திறந்து உள்ளார்.

இங்க இருந்து நீ வெளியில போகணும்னா கடவுள வேண்டிக்கோ..! 'பரம்பொருள்' படத்தின் ட்ரைலர் வெளியானது!

ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் பகுதிகள் முடிந்து நிலையில் அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் நடிகர் ஜாக்கியிடம் சொல்ல மறந்துள்ளார். அதன் பிறகு அவரிடம் சொல்லிவிட்டு செல்லத்தை அறிந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததுமட்டுமல்லாமல், அவரிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார் சூப்பர்  ரஜினிகாந்த்.

அதை கண்டு கண்கலங்கிநின்ற ஜாக்கி அவரை கட்டியணைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் அவர். சூப்பரஸ்டார் ரஜினிகாந்த்  தனக்கு எப்போது சிறந்த குருவாக  நிகழ்ந்ததாக கூறியுள்ளார் ஜாக்கி. இந்த ஜெயிலர் திரைப்படத்தில் தனது  கதாபாத்திரம் சிறுது தான் என்றாலும் மனநிறைவான இருந்ததாக அவர் கூறியுள்ளார். 

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவருடன் நடிக்க ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார் அவர் கூறியுள்ளார். பாலிவுட் உலகில் பல சூப்பர்ஹிட் படங்களை நடித்துள்ள ஜாக்கி ஷெராஃப் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'சீதா ராமம்' படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது! சந்தோஷத்தில் படக்குழு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!