
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய் தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, இரண்டு, மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர்.
மேலும் செய்திகள்: நடிகை தமன்னா தீவிர உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டாரா? முழு விவரம் இதோ...
நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக, சமீபத்தில் டெல்லி சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தளபதி விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டனர். விஜயின் 66 வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இந்த இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
மேலும் செய்திகள்: பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 'ஈ' படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மேலும் 'வெப்பம்', 'ஆஹா கல்யாணம்', மற்றும் 'நிமிர்த்து நில்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்க்கு வில்லனாக நானி நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், சமூகவலைதளத்தில் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.