
‘லாக்கப்’,‘கபெ.ரணசிங்கம்’,'மதில்’, ‘ஒருபக்க கதை’,‘மலேஷியா டு அம்னீஷியா’, டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து, மேலும் பல படங்களை ஜீ5 தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: அதிரடி சரவெடி... வேற லெவெலுக்கு செம்ம மாஸாக உருவாக போகும் 'தல 61'..! போனி கபூர் கூறிய தகவல்..!
இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்து வெளியாகும் படத்தை அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி (Sanchitha Shetty), ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மேலும் செய்திகள்: ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தாவின் பளீச் பதில்..!! ஒரு வழியாக முடிவுக்கு வந்த வதந்தி..!!
இந்த படம் குறித்து சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையானமுறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின்கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்.
தம்பி இராமையா கூறும் போது, ‘இந்த கதை அனைத்துமக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலைமுடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார். நடிகை சஞ்சிதா ஷெட்டி பகிர்ந்து கொண்டுள்ளதாவது, ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாகவிரும்புவார்கள். இது ஒரு குடும்பபொழுதுபோக்காக இருக்கும். இந்தபடத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்". இப்படம் அக்டோபர் 13 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.