அதிரடி சரவெடி... வேற லெவெலுக்கு செம்ம மாஸாக உருவாக போகும் 'தல 61'..! போனி கபூர் கூறிய தகவல்..!

Published : Sep 30, 2021, 01:13 PM IST
அதிரடி சரவெடி... வேற லெவெலுக்கு செம்ம மாஸாக உருவாக போகும் 'தல 61'..! போனி கபூர் கூறிய தகவல்..!

சுருக்கம்

தல அஜித் (Ajith Kumar) மூன்றாவது முறையாக தன்னுடைய 61ஆவது படத்தையும் போனி கபூர் (Boney Kapoor) தயாரிப்பில் நடிக்க உள்ளதாக, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

தல அஜித் மூன்றாவது முறையாக தன்னுடைய 61ஆவது படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக, மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தாவின் பளீச் பதில்..!! ஒரு வழியாக முடிவுக்கு வந்த வதந்தி..!!

 

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: விஜய் சிறந்த நடிகர் இல்லை என விமர்சித்த மலையாள நடிகர்..!! பதிலடி கொடுத்த மெர்சல் வில்லன்..!!

 

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும், சுமார் இரண்டு வருடங்களாக வலிமை படம் உருவாகி வந்த நிலையில், இந்த படம் குறித்து அடிக்கடி சில அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான முன்னோட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்: புதிய புல்லட்டில் சும்மா சோக்கா... கெத்து காட்டும் நடிகை கனிகா! ஹீரோயின் லுக்கில் அசத்தும் வேற லெவல் போட்டோஸ்!

 

வலிமை படத்தை தொடர்ந்து, அஜித் யார் நடிப்பில் யார் இயக்கத்தில் நடிப்பார்? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில்  தயாரிப்பாளர் போனி கபூர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தின் 61 வது படத்தை மீண்டும் தயாரிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: கமல் - சூர்யா பட நடிகர் போதை பொருள் கடத்தல் வழக்கில் அதிரடி கைது!! கதாபாத்திரத்தை உண்மையாகிட்டாரே...

 

 

வலிமை பணத்தை விட இரண்டு மடங்கு மாஸாக, இப்படம் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார். அதேபோல் தல அஜித் மேல் அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை போல், வேறு எந்த நடிகருக்கும் இருப்பதைத்தான் பார்க்கவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு, உலக அளவில் இந்த படத்தை பிரபலம் ஆகி விட்டனர். என மிகவும் ஆச்சரியத்துடன் இந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!