கமல் - சூர்யா பட நடிகர் போதை பொருள் கடத்தல் வழக்கில் அதிரடி கைது!! கதாபாத்திரத்தை உண்மையாகிட்டாரே...

Published : Sep 29, 2021, 06:39 PM IST
கமல் - சூர்யா பட நடிகர் போதை பொருள் கடத்தல் வழக்கில் அதிரடி கைது!! கதாபாத்திரத்தை உண்மையாகிட்டாரே...

சுருக்கம்

விஸ்வரூபம், (Vishwaroopam) சிங்கம், (Singam) போன்ற பல படங்களில் நடித்த நைஜீரியாவை சேர்த்த செக்வுமே மால்வின் (Chekwume Malvin) என்பவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பெங்களூரு காவல்துறையினர், போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நைஜீரிய சேர்ந்த செக்வுமே மால்வின் என்கிற நடிகரை இன்று கைது செய்துள்ளனர்.

நடிகர்    செக்வுமே மால்வின், 20 க்கும் மேற்பட்ட பாலிவுட், கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திருந்த இவரை பெங்களூரு கிழக்கு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்த போது, மல்வின் மருத்துவ விசாவில் இந்தியாவில் இருப்பதாகவும், மும்பையில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் இரண்டு மாத பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பெங்களூருவில் உள்ள எச்.பி.ஆர் லேஅவுட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ரகசிய தகவல் கிடைத்ததும் மால்வினை போலீசார் கைது செய்தனர். இவர் மாணவர்கள் மற்றும் சில தொழிலதிபர்களுக்கு போதை பொருள் விநியோகம் செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். மால்வின் இதுவரை நடிகர் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம், சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிலும் சூரியாவின் சிங்கம் பதில் போதை பொருள் கடத்தல் காரராகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை தவிர  அண்ணா பாண்ட், தில்வாலே, ஜம்பூ சவரி மற்றும் பரமாத்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் மூன்று நோலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இவரிடம் இருந்து 15 கிராம் மடமை போதை பொருள், 250 மிலி ஹாஷ் ஆயில், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.    

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!