இன்னும் ஒரே நாள்தான்... ஐயய்யோ... சாம் யேசுதாஸால் ருத்ரதாண்டவம் படத்திற்கு சிக்கல்..?

By Thiraviaraj RMFirst Published Sep 29, 2021, 6:17 PM IST
Highlights

திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சிறுபான்மை கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளது

சிறுபான்மை கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகக் கூறி  ருத்ர தாண்டவம் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை  உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை தனது ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மோகன் ஜியே தயாரித்துள்ளார். மதமாற்றம், பி.சி.ஆர். சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை அபகரிப்பது ஆகியவற்றை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் ஸ்நீக் பீக் வீடியோ நேற்று வெளியாகி இருந்தது. அதில்,  கிருஸ்துவ பாதிரியாரான மனோபாலா பண வசூலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்வையிட்ட சினிமா பிரபலங்களும், பிரமுகர்களும் பாராட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ருத்ர தாண்டவம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்

.

’’மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சிறுபான்மை கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளது’’என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக  நாளைக்குள் பதில் அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் படத்திற்கு சிக்கல் வருமா என பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

click me!