கையில் பணம் இல்லை... வீட்டை விற்று பணம் அனுப்பிய என் அம்மா! வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை பகிர்ந்துகொண்ட அர்ஜுன்!

Published : Sep 29, 2021, 05:42 PM ISTUpdated : Sep 29, 2021, 05:51 PM IST
கையில் பணம் இல்லை... வீட்டை விற்று பணம் அனுப்பிய என் அம்மா! வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை பகிர்ந்துகொண்ட அர்ஜுன்!

சுருக்கம்

நடிகர் அர்ஜுன் (Arjun) தொகுப்பாளராக உள்ள, 'சர்வைவர்' (Survivor) நிகழ்ச்சியில் அவர் ஒரு காலகட்டத்தில் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது.  

நடிகர் அர்ஜுன் தொகுப்பாளராக உள்ள, 'சர்வைவர்' நிகழ்ச்சியில் அவர் ஒரு காலகட்டத்தில் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: சம்பள விஷயத்தில் நயன்தாராவையே மிஞ்சிய ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி!! எவ்வளவு தெரியுமா?

 

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜுன் தற்போது, நடிப்பு, இயக்கம், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு தொகுப்பாளராகவும் களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். ஒரு தீவில் இயக்கையோடு விளையாட கூடிய 'சர்வைவர்' போட்டியில் வெற்றி பெற, மன வலிமை, உடல் வலிமை, சமயோஜிதமாக யோசித்தால், போன்ற பல திறமைகளும் இருந்தால் தான் வெற்றிபெற முடியும்.

காடர்கள் அணி, வேடர்கள் அணி என இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதுவரை இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் 'சர்வைவர்' நிகழ்ச்சிக்கான டாஸ்குகளும் கடுமையாகிக்கொண்டே செல்கிறது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தொகுப்பாளர் அர்ஜுன் பேசுவதும் உண்டு.

மேலும் செய்திகள்: 'தாஜ்மகால்' மச்சக்கன்னியா இது? 40 வயதில் டாப் லெஸ் கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ரியா சென் படு ஹாட் போட்டோஸ்!

 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், அர்ஜுன் தன்னுடைய படங்கள் தோல்வியடைந்த போது பட்ட கஷ்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, "தமிழ் சினிமாவில் தான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன்.... திடீர் என தனக்கே தெரியாமல் சில படங்கள் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தானே படங்களை தயாரித்து, இயக்க முடிவு செய்தேன். அப்படி ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும் போது கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க தன்னிடம் சுத்தமாக பணம் இல்லை.

மேலும் செய்திகள்: மளமளவென எடையை குறைத்தது இப்படி தானா? ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட நடிகை குஷ்பு..!!

 

அப்போது பெங்களூரில் தன்னுடைய அம்மாவிற்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது, அந்த வீட்டை விற்று தன்னுடைய அம்மா பணம் அனுப்பியதாக, தான் பட்ட கஷ்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புரோமோ இதோ...

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!