பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Published : Sep 30, 2021, 02:46 PM IST
பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சுருக்கம்

கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) என்பவர் திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) என்பவர் திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்: அதிரடி சரவெடி... வேற லெவெலுக்கு செம்ம மாஸாக உருவாக போகும் 'தல 61'..! போனி கபூர் கூறிய தகவல்..!

 

சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்தவர், வளர்ந்து வரும் நடிகையான இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திடீர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தாவின் பளீச் பதில்..!! ஒரு வழியாக முடிவுக்கு வந்த வதந்தி..!!

 

தன்னுடைய இறப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில்  என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை மன்னித்து விடுங்கள். தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!