"அப்போ இவருக்கும் வயசாகும் போல".. வெளியான ஜாக்கி சானின் லேட்டஸ்ட் போட்டோ - லைக்குகளை குவிக்கும் 90ஸ் கிட்ஸ்!

Ansgar R |  
Published : Mar 15, 2024, 07:37 PM IST
"அப்போ இவருக்கும் வயசாகும் போல".. வெளியான ஜாக்கி சானின் லேட்டஸ்ட் போட்டோ - லைக்குகளை குவிக்கும் 90ஸ் கிட்ஸ்!

சுருக்கம்

Jackie Chan : ஹாலிவுட் படங்கள் என்றாலே 90களில் முற்பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கு நினைவில் வரும் ஒரே ஒரு பெயர் ஜாக்கி சான் என்றால் அது மிகையல்ல.

இந்த காலகட்டத்தில் தமிழ் ரசிகர்கள் அனைத்து மொழி திரைப்படங்களையும் பெரிய அளவில் ரசித்து வருகின்றனர். அதற்கு ஊடகங்கள் பெரும் உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் ஊடகத்தின் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு நடிகர் தான் ஜாக்கி சான். 

அவருடைய படங்களில், இறுதியில் போடப்படும் அந்த Bloopers காட்சிகளுக்காகவே அவருடைய திரைப்படங்களை பெரிதும் ரசிக்கும் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது. 90களில் பிறந்த குழந்தைகளுக்கு சொந்தமான ஒரு விஷயம் என்றால் அது ஜாக்கிசான் என்றே கூறலாம் அதிலும் குறிப்பாக டிவியிலும் அவருடைய நாடகங்களை பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வந்தது. 

Nadhiya: இனி அப்படி கூப்பிட்டா முத்தம் கொடுத்துடுவேன்! நதியாவை உதட்டை மூடிக்கொண்டு ஓடவைத்த நடிகர்!

கடந்த 1954 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்கின்ற இடத்தில் பிறந்தவர் தான் ஜாக்கி சான். முதலில் பிரபல நடிகர் புரூஸ்லீ அவர்களுடைய ஸ்டண்ட் கலைஞராக திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு மெல்ல மெல்ல ஹாலிவுட் உலகில் இவருடைய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 

ஜாக்கி சானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற விருதுகளை அவருடைய சினிமா பயணத்தில் அவர் பெற்றிருந்தாலும் அவர் பெற்ற ஆஸ்கர் விருது தனக்கு மறக்க முடியாத ஒன்று என்று அவர் பல மேடைகளில் கூறியிருக்கிறார். 1962 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜாக்கி சான்.  

இன்னும் சொல்லப்போனால் இந்த 2024 ஆம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானை பார்த்து, "இவருக்கும் வயதாகுமோ" என்கின்ற ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.  

கோலிவுட்டில் மீண்டும் ஒரு Fantasy Adventure படம்.. யோகி பாபு & வேதிகா இணையும் "கஜானா" - மிரட்டும் டீசர் இதோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!