நடிகை லட்சுமி மேனன் சேலம் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடனமாடி அசத்தினார்.
சேலம் அருகே உள்ள மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கோயில் திருவிழா முன்னிட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட நடிகை லட்சுமி மேனன் கலந்து கொண்டு நடன கலைஞர்களுடன் மேடையில் குத்தாட்டம் போட்டார். ஒரு பாடல் மட்டும் ஆடிய நிலையில் இன்னொரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில் இன்னொரு திரையிசை பாடலுக்கும் நடனமாடி கொண்டாடினார்.
லட்சுமிமேனன் ஆட்டத்தை கண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று முண்டியடித்து மேடையை நோக்கி வந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேடையை நோக்கி வந்ததால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தினர்.
இதையும் படியுங்கள்... சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி விறுவிறுவென முன்னேறிய விஜய் டிவி சீரியல்... டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ
ஒரே நேரத்தில் நடிகை லட்சுமிமேனனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெண்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி ஒரு சில இளைஞர்கள் பெண்கள் மேடைக்கு சென்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் தொடர்ந்து நடிகை காவல்துறை உதவியுடன் அங்கிருந்து பத்திரமாக மீட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் தற்போது மலை மற்றும் சப்தம் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சப்தம் படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல் மலை படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். இந்த இரண்டு படங்களும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Director Hari : "சிங்கத்தோடு கைகோர்த்த ஆறுச்சாமி".. இது ஹரி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் - அவரே சொன்ன மாஸ் தகவல்!