கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உடன் இணைந்து இயக்குனர் ராஜமவுலி நடித்த விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸில் இருந்த வார்னர் பின்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி ஒரு முறை கோப்பையும் வென்று கொடுத்தார். இதையடுத்து ஐதராபாத் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட டேவிட் வார்னர், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருக்கும் போது தெலுங்கு பட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக வெளியிட்டு வந்தார் டேவிட் வார்னர். அதிலும் பாகுபலி, புஷ்பா போன்று நடித்து அவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இதனால் அவரும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிட தொடங்கினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு விரைவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வந்தனர்.
இதையும் படியுங்கள்... Rajamouli Dance : திடீரென பிரபுதேவா-வாக மாறி டாப் கிளாஸாக டான்ஸ் ஆடிய இயக்குனர் ராஜமவுலி - வைரல் வீடியோ இதோ
அவர்கள் சொன்னபடியே தற்போது நடிகராக களமிறங்கி இருக்கிறார் டேவிட் வார்னர். அதுவும் ராஜமவுலி டைரக்ஷனில் அவர் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். டேவிட் வார்னரும், இயக்குனர் ராஜமவுலியும் இணைந்து கிரெட் ஆப் என்கிற செயலிக்கான விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த விளம்பரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.
அந்த விளம்பரத்தில் பாகுபலி வேடத்தில் நடிப்பதற்குள் இயக்குனர் ராஜமவுலியை படாதபாடு படுத்தி இருக்கிறார் டேவிட் வார்னர். அந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குனர் ராஜமவுலி, என்னுடைய வாழ்நாளிலேயே நான் நீண்ட நாட்கள் எடுத்த ஷூட்டிங் இதுதான் என குறிப்பிட்டு இருக்கிறார். இவர்களின் காம்போவில் வெளியாகி இருக்கும் இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
The longest shoot of my life.😉
pic.twitter.com/nHgB43igYK
இதையும் படியுங்கள்... டெல்லியால் தலைகீழாக மாறிய புள்ளிப்பட்டியலில் – பரிதாப நிலையில் ஆர்சிபி!