Vaadivaasal : கைவிடப்பட்டதா சூர்யாவின் வாடிவாசல்? புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்?

Ansgar R |  
Published : Apr 12, 2024, 06:05 PM IST
Vaadivaasal : கைவிடப்பட்டதா சூர்யாவின் வாடிவாசல்? புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்?

சுருக்கம்

Vetrimaaran Vaadivaasal : பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் அறிவிக்கப்பட்ட படம் தான் வாடிவாசல். இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் வெளிநாட்டில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடலூரில் கடந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த இயக்குனர் தான் வெற்றிமாறன். சென்னையில் தனது பட்டப்படிப்பை படித்து வந்த வெற்றிமாறன், இயக்குனர் பாலு மகேந்திராவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக திரை துறையில் களம் இறங்கினார். கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "பொல்லாதவன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார். 

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு மீண்டும் பிரபல நடிகர் தனுஷ் அவர்களை வைத்து "ஆடுகளம்" என்கின்ற திரைப்படத்தை தயாரித்து வழங்கி, அந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார் வெற்றிமாறன். அதன்பிறகு "விசாரணை", "வடசென்னை" மற்றும் "அசுரன்" போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி வந்தார் வெற்றிமாறன். 

Sayaji Shinde: நெஞ்சுவலி காரணமாக பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "விடுதலை" திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய வெற்றிமாறன், அதன் மூலம் காமெடி நடிகர் சூரியின் மீது இருந்த பிம்பத்தை முற்றிலும் உடைத்து அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் திரை உலகிற்கு அளித்தார். தற்பொழுது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார். 

இந்நிலையில் அவர் பிரபல நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருந்த "வாடிவாசல்" என்கின்ற திரைப்படம் தற்பொழுது கைவிடப்பட்டதாக பல தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளிவந்து கொண்டிருந்தது. இப்பொது இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறினிடம் கேட்ட பொழுது, சூர்யாவை வைத்து நான் இயக்க துவங்கிய "வாடிவாசல்" திரைப்படம் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படம் ஆகவே அதை கைவிட வாய்ப்பில்லை. 

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனக்கு அதிக காலம் தேவைப்பட்டு வருவதால், இப்பட பணிகள் முடிந்த உடனேயே தான் "வாடிவாசல்" பட பணிகளை துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். ஆகவே இந்த திரைப்படத்திலிருந்து சூர்யா விலகவில்லை என்றும் வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை விரைவில் துவங்குவார்கள் என்கின்ற அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

Rj Bravo: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை விஷயம் இருக்கா? இதுவரை யாரும் சொல்லாத ரகசியங்களை உடைத்த ஆர்.ஜே.பிராவோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ