Rajamouli Dance : திடீரென பிரபுதேவா-வாக மாறி டாப் கிளாஸாக டான்ஸ் ஆடிய இயக்குனர் ராஜமவுலி - வைரல் வீடியோ இதோ

By Ganesh A  |  First Published Apr 12, 2024, 9:19 AM IST

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமவுலி தன் மனைவியுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.


பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்றால் அது இயக்குனர் ராஜமவுலி தான். அவர் இயக்கத்தில் வெளிவந்த மகதீரா, நான் ஈ, பாகுபலி, போன்ற படங்கள் பான் இந்தியா அளவில் வெளியாகி மாஸ்ஹிட் அடித்த பின்னர் தான் அதிகளவில் பான் இந்தியா படங்கள் வெளிவர தொடங்கின. இதுவரை அவரை இயக்கிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன. அதுமட்டுமின்றி நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் ராஜமவுலி.

அவர் இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது. கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Amala Paul : என் சாப்பாட்டை திருடும் "பேட் பாய்ஸ்" - கணவர் & சகோதரரை கழுவி ஊற்றிய அமலா பால்! Viral Video!

மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி. இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. மேலும் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை எடுக்கும் ஐடியாவில் உள்ளாராம் ராஜமவுலி. ஆர்.ஆர்.ஆர் படத்தை போல் இப்படத்திலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படத்தின் பணிகள் ஒரு புறம் பிசியாக நடந்துவர, இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தன் மனைவி உடன் இணைந்து நடன பயிற்சி மேற்கொள்கிறார் ராஜமவுலி. ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம்பெறும் ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ பாடலுக்கு டாப் கிளாஸாக டான்ஸ் ஆடி இருக்கிறார் ராஜமவுலி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுறாரு என வாயடைத்துப் போய் உள்ளனர்.

மனைவியோடு சேர்ந்து இயக்குனர் ராஜமவுலி ஆடிய அசத்தல் நடனம் pic.twitter.com/UVgn3MGZXP

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இதையும் படியுங்கள்... GOAT : கோட் பட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள 2000ம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

click me!