
புஷ்பா 2 : தி ரூல், ரசிகர்களின் விசில் சத்தத்திற்கு மத்தியில் கடந்த செவ்வாயன்று அப்படத்தின் டீசர் வெளியானது. அன்று முதல் அது youtube தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. முன்னணி நட்சத்திரங்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும்போது, இந்த படத்தில் வரும் ஒரு ஆறு நிமிட காட்சியை படமாக்க தயாரிப்பாளர்கள் சுமார் 60 கோடி செலவழித்ததாகக் கூறப்பட்டது.
குறிப்பிட்ட அந்த காட்சியின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு கிட்டத்தட்ட 30 நாட்கள் எடுத்ததாக அறிக்கை மேலும் கூறியது.வெளியான அறிக்கையின்படி, அந்த காட்சியில் கங்கம்மா ஜாதரா நிகழ்ச்சியும், அப்போது நடக்கும் ஒரு சண்டைக் காட்சியும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூலின் முதல் பார்வை அல்லு அர்ஜுனின் 42 வது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள பழங்குடியின தெய்வங்களை கௌரவிக்கும் திருவிழாவான ஜாதரா காட்சியை சில நொடிகள் கொண்ட அந்த டீஸர் பெரிய அளவில் வைரலானது. பின்னணி இசை மற்றும் காட்சியின் பிரம்மாண்டம் தவிர, அல்லு அர்ஜுனின் "Swag" தான் அதை இன்னும் அதிகமாக சிறப்பாக்கியது. இறுதியில் அவரின் அந்த உடல் மொழியிலும் விசில் சத்தத்தை பெற்றது.
புஷ்பா 2 : தி ரூல் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சுகுமார் இயக்கத்தில், பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.