நடிகர் அருள்மணி திடீர் மாரடைப்பால் காலமானார்! அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி!

By SG Balan  |  First Published Apr 12, 2024, 12:44 AM IST

அருள்மணி அழகி, தென்றல், தாண்டவகோனே போன்ற பல்வேறு திரைப்படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.


நடிகரும் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான அருள்மணி வியாழக்கிழமை இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்களும் அதிமுக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அருள்மணி. சினிமாவில் நடிப்பதுடன் நில்லாமல் அரசியல் மேடை, இயக்குநர் பயிற்சி பள்ளி என பல பணிகளில் இயங்கி வந்தார்.

Tap to resize

Latest Videos

சென்னை ஈ.வே.ரா. சாலையில் மீண்டும் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

அருள்மணி அழகி, தென்றல், தாண்டவகோனே போன்ற பல்வேறு திரைப்படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அரசியலில் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்து செயல்படத் தொடங்கினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துவந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை தேர்தல் பிரச்சார களத்திற்கு இடையில் ஓய்வு எடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு அருள்மணியின் உயிர் பிரிந்தது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் உலகின் மிகப் பெரிய பசுமை ஆற்றல் பூங்கா! பாரிஸ் நகரைவிட 5 மடங்கு பெருசு!

click me!