Director Hari : "சிங்கத்தோடு கைகோர்த்த ஆறுச்சாமி".. இது ஹரி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் - அவரே சொன்ன மாஸ் தகவல்!

By Ansgar R  |  First Published Apr 13, 2024, 9:52 AM IST

Hari Cinematic Universe : தமிழ் சினிமாவில் Commercial படங்களின் கிங்காக திகழ்ந்து வருபவர் தான் பிரபல இயக்குனர் ஹரி. அவர் இயக்கத்தில் இப்பொது விஷாலின் ரத்னம் படம் உருவாகியுள்ளது.


சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான டாப் ஸ்டார் பிரசாந்தின் "தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் ஹரி. அன்று தொடங்கி இன்று வரை அவருடைய இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. 

"சாமி", "கோவில்", "அருள்", "ஐயா", "ஆறு" மற்றும் "தாமிரபரணி" என்று தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியிட்ட திரைப்படம் தான் "சிங்கம்". இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

Sabdham : மாறுபட்ட வேடத்தில் சிம்ரன்.. மிரட்டும் லட்சுமி மேனன் - த்ரில்லிங் அனுபவம் தரும் "சப்தம்" - டீஸர் இதோ

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அருண் விஜயின் "யானை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்த ஹரி, தற்பொழுது பிரபல நடிகர் விஷால் அவர்களை வைத்து "ரத்னம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஹரி அவர்களிடம் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த ஹரி, தன்னுடைய சிங்கம் படத்தில் வரும் கதாபாத்திரத்தையும், சாமி திரைப்படத்தில் வரும் ஆறு சாமி என்கின்ற கதாபாத்திரத்தையும் ஒரு காட்சியில் இணைக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அதாவது "துரைசிங்கம் தனது மனைவியோடு பைக்கில் வந்து கொண்டிருப்பது போலவும், எதிரே ஆறுசாமி தனது மனைவி திரிஷாவுடன் காரில் வந்து கொண்டிருப்பது போலவும், இருவரும் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி பேசிக்கொள்வது போலவும் காட்சிகளை தான் அமைக்க முயன்றதாக கூறியுள்ளார். 

ஆனால் இது ஒரு கமர்சியல் திரைப்படம் என்பதால் அதை பிறகு கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் இப்பொழுது உள்ள இயக்குனர்கள் அந்த யுக்தியை மிக அருமையாக கையாளுகிறார்கள், குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகச்சிறந்த முறையில் தனது கதை களத்தை அமைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார் இயக்குனர் ஹரி.

சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி விறுவிறுவென முன்னேறிய விஜய் டிவி சீரியல்... டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ

click me!