ஏற்கனவே தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா, அண்மையில் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் அசத்தலாக நடித்து பலரின் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் ஒரு புதிய ஸ்கின் கேர் பிராண்டை துவங்க உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நயன்தாரா ஒரு புதிய ஸ்கின் கேர் பிராண்ட் நிறுவனத்தை துவங்க ஆயத்தமாகி வந்தார். இதனையடுத்து அது குறித்த சில தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தற்போது வெளியிட்டுள்ளார். தனது ஸ்கின் கேர் நிறுவனத்தின் முதல் தயாரிப்பை அவர் நாளை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோலாலம்பூரில் தங்களின் ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் அறிமுகம் செய்ய உள்ளனர். அவர்கள் சிங்கப்பூர் தொழிலதிபரான டெய்சி மோர்கனுடன் இணைந்து தற்போது இந்த வணிக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளியான சில தகவல்களின்படி இந்த நிகழ்வு வரும் செப்டம்பர் 29 அன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் நெல்சனுடன் கைகோர்க்கும் அனிரூத்..? புது மாப்பிள்ளை தான் ஹீரோவாம் - வெளியான சுவாரசிய தகவல்!
இந்த மாத தொடக்கத்தில், நயன்தாரா தனது ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதே போல அடுத்த பதிவில், "இன்று, எங்கள் ஆறு வருட அயராத முயற்சி மற்றும் அன்பை வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் பார்முலாக்கள் மற்றும் உங்கள் சுய-கவனிப்பு வழக்கத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளோம் என்றார்.
இந்நிலையில் விரைவில் இந்த நிறுவனம் தங்கள் பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், நாளை தங்கள் ஸ்கின் கேர் தயாரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கதிர் - ஞானத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..! வசமாக சிக்கும் நந்தினி.. சுயரூபத்தை காட்டிய விசாலாட்சி!