மீண்டும் நெல்சனுடன் கைகோர்க்கும் அனிரூத்..? புது மாப்பிள்ளை தான் ஹீரோவாம் - வெளியான சுவாரசிய தகவல்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலமாக கலவையான விமர்சனங்களை பெற்ற இயக்குனர் நெல்சன் திலீப் குமார், தனது ஜெயிலர் திரைப்பட வெற்றியின் மூலம் மீண்டும் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல.
Jailer movie
அனிருத்தின் இசை ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்துவரும் நிலையில் மீண்டும் ஒருமுறை இசையமைப்பாளர் அனிருத் உடன் இணையவிருக்கிறார் நெல்சன் திலிப் குமார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
டயானா எப்படி நயன்தாராவாக மாறினார் ? பெயர் மாற்றம் குறித்து லேடி சூப்பர்ஸ்டாரே சொன்ன தகவல்..
Actor Kavin
அண்மையில் திருமணம் முடித்த பிரபல நடிகர் கவின் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் அவர்களின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Priyanka Mohan
இந்த படத்தின் மூலம் நெல்சன் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாகவும், மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நாயகி பிரியங்கா மோகன் அவர்கள் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஆஹா இந்த நடிகையா... இவங்க சண்டைக்கோழியாச்சே! சீரியல் வில்லியின் வருகையால் குஷியில் பிக்பாஸ் டீம்!