எதிர்நீச்சல் சீரியலின், இன்றைய புரோமோ வெளியாகி... எபிசோட் மீதான விறுவிறுப்பை அதிகரிக்க செய்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர், யாரும் யூகிக்க முடியாத கதைக்களத்தில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லை என்றாலும்... அடுத்தடுத்த ட்விஸ்ட் மூலம் கதைக்களத்தை வலுவாக மாற்றியுள்ளார் இயக்குனர் திருச்செல்வம். மாரிமுத்து மறைவுக்கு பின்னர் அவரின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது இதுவரை தெரியாததால், 40 சதவீத சொத்து பிரச்சனையும் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.
எனினும் நேற்றைய தினம் யாரோ ஒரு நபர் வெள்ளை வேஷ்டியில் வருவது போல்... காட்டப்பட்ட நிலையில், அது அடுத்த ஆதி குணசேகரனா? அல்லது ஆதி பகவான் என்கிற கதாபாத்திரமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இன்றைய தினம்... அந்த கால் யாருடையது என்கிற சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vijay Antony : மகள் இறந்த 6 நாட்களில்... படப்பிடிப்பில் கலந்து கொண்டாரா விஜய் ஆண்டனி! என்ன காரணம்?
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள புரோமோவில்..." நேற்று குணசேகரனை காட்டுவதாக கதிர் மற்றும் ஞானத்தை கோவிலில் காத்திருக்க சொன்ன அந்த சாமியார், மீண்டும் கதிர் - ஞானத்திடம் எதோ கூற... அதற்க்கு அவர்கள் என்னய்யா கொழப்புற, அண்ணன் எங்கய்யா என கேட்கின்றனர். அதற்க்கு அந்த சாமியாரும்... நான் சொல்றத நம்பலையா, அங்க பாருங்க ஆதாரம் என எதையோ காட்டுகிறார். அதை பார்த்து கதிரும், ஞானமும் அதிர்ச்சியடைகின்றனர்.
இதை தொடர்ந்து வீட்டில் கையில், சாப்பாட்டு வாலியுடன் நந்தினி நிற்கிறார். சந்தேகப்பட்டு உள்ளே வரும் கதிர், நந்தினியிடம் "எங்கடி போகுது இந்த சோறுலாம் என கேட்க, நந்தினி ஏதேதோ கூறி மழுப்புகிறார். உடனே அங்கு வரும் விசாலாட்சி நான் சொல்கிறேன் என, உண்மையை உடைப்பார் என தெரிகிறது. எனவே இன்றைய எபிசோடில் என்ன கலவரம் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...