சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு பிறகு, அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் யாரும் நடிக்கவில்லை.
பொதுவாக பல்வேறு காரணங்களால் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் விலகும் போது, அவர்களை மாற்றுவது வழக்கம்.. மக்களிடையே பிரபலமான அந்த கேரக்டரை மாற்றும் போது இவருக்கு பதில் இவர் என்று ஒரு கார்டு போட்டு விட்டு சீரியலை தொடர்வார்கள். ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு பிறகு, அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் யாரும் நடிக்கவில்லை.
ஏனெனில் அந்த சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்திருப்பார் மாரிமுத்து. அவருக்காகவே அந்த சீரியல் பார்க்கும் பலர் உள்ளனர். ஆணாதிக்கமிக்க நெகட்டிவ் கேரக்டரில் நடிந்திருந்தாலும் தனக்கென ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் மாரிமுத்து. மீம் கிரியேட்டர்களின் கண்டண்ட் கொடுப்பவராகவும் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்திருந்தார்.
எனவே அவருக்கு பதில் யாரை குணசேகரனாக நடிக்க வைத்தாலும், அதை அவ்வளவு எளிதாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வமும் சமீபத்தில் குணசேகரன் என்றால் அது மாரிமுத்து சார் தான். வேறு யாரையும் அதில் அவ்வளவு எளிதாக பொருத்தி பார்க்க முடியாது என்று கூறியிருந்தார். இதனிடயே குணசேகரன் கேரக்டரில் நடிக்க வைக்க வேல ராமமூர்த்தி, பசுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு ஒரு அண்னன் இருக்கிறார் என்ற நோக்கில் கதை நகர்ந்து வருகிறது. எனினும் அவர் பிறந்ததும் இறந்துவிட்டார் என்று விசாலாட்சி கூறியிருந்தார். ஆனால் நேற்றைய எபிசோடின் முடிவில் காரில் இருந்து வெள்ளை வேஷ்டி கட்டிய நபர் இறங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. எனவே அந்த கேரக்டர் குணசேகரனா அல்லது அவரின் அண்ணனா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லியோ படம் பார்த்துவிட்டு, விஜய் கொடுத்த அந்த ரியாக்ஷன்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்!
ஒருவேளை குணசேகரன் எனில் அதில் நடித்திருக்கும் நடிகர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அந்த கால் கொஞ்சம் கலராக இருப்பதால் அது வேல ராமமூர்த்தியோ அல்லது பசுபதியாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அந்த கேரக்டரில் நடிக்க இருப்பது பிரபல நடிகரும், இயக்குனருமான அழகம் பெருமாளின் காலாக இருக்கலாம் என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ ரசிகர்கள் மத்தியில் நிலவும் கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை கிடைத்துவிடும்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..