
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான, அருண் பாண்டியன் தந்தையின் 95-ஆவது பிறந்தநாள் நேற்று அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அருண் பாண்டியனின் மகள் கவிதா பாண்டியன், கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன், உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை... கீர்த்தி பாண்டியனின் சகோதரி கவிதா பாண்டியன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு மட்டும் இன்றி ரசிகர்களும் 95 வயதாகும் அருண் பாண்டியனின் தந்தைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு விவசாயியான கீர்த்தி பாண்டியனின் தாத்தா... 95 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். அதே போல் இன்னும் பல வருடங்கள் அவர் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். கீர்த்தி பாண்டியனின் திருமணம் நடைபெற்றதற்கு பின், கீர்த்தி பாண்டியன் தாத்தா பிறந்தநாளுக்காக ஒட்டு மொத்த குடும்பமே ஒன்று கூடி செலிபிரேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.