
பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த ஆக்ஷன் திரைப்படம் 'படே மியன் சோட்டே மியன்' பிளாக் பஸ்டர் ஆகும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பது இப்படத்தின் டிரைலரில் தெரியவந்துள்ளது. படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக இது உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி மற்றும் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் இணைந்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கொடுக்கும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான படத்தை எடுத்துள்ளனர்.
இப்படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது. இதில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் கூட்டணியின் திரை ஆளுமை தெளிவாக பதிவாகியுள்ளது. இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.
"ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டை காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்," என்று அக்ஷய் குமார் தெரிவித்தார்.
"இப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு அலாதியான திரை அனுபவத்தை கொடுக்கும் என்பதை டிரைலர் கூறுகிறது. இப்படத்தின் கதையை எல்லோரையும் கவர்ந்தது. மேலும் அக்ஷய் குமாருடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் இப்படத்தை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று டைகர் ஷெராஃப் தெரிவித்தார்.
"இப்படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தை நடித்தது மன நிறைவை கொடுத்தது. ரசிகர்களுக்கு இப்படம் சிறப்பான திரை விருந்தாக அமையும்," என்று பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்தார். தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி கூறுகையில், "என் தந்தையின் மிக பிரபலமான மற்றும் நெருங்கிய ஐபியான 'படே மியான் சோட் மியான்' ஐ எடுத்து இந்தியாவே கண்டிராத மிகப்பெரிய படைப்பாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இரண்டு சிறந்த அதிரடி நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப், பிருத்விராஜ் ஆகியோரை வைத்து இயக்குநர், அலி அப்பாஸ் ஜாஃபர் இந்த திட்டத்தை வழிநடத்துகிறார்."
" நான் எப்போதும் பெருமையாக உணரும் திரைப்படம் படே மியன் சோட்டே மியன். அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் படக்குழு சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இதுவரை யாரும் கண்டிராத திரை அனுபவத்தை வழங்கும் இப்படத்தை எடுக்க இதன் தயாரிப்பாளர்கள் ஆதரவாக செயல்பட்டனர்," என்று இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் தெரிவித்தார்.
ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இதில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்கா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.