Puneeth Rajkumar உடலுக்கு கண்ணீரோடு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

Published : Oct 31, 2021, 11:00 AM IST
Puneeth Rajkumar உடலுக்கு கண்ணீரோடு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

சுருக்கம்

மறைந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீரோடு புனீத் ராஜ்குமார் நெற்றியில் முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.  

மறைந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீரோடு புனீத் ராஜ்குமார் நெற்றியில் முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனீத் ராஜ்குமார் (46), கடந்த 29-ஆம் தேதி தன்னுடைய வீட்டில் உள்ள உடல்பயிற்சி கூடத்தில், உடல்பயிற்சி செய்து கொண்டிருந்த போது நெஞ்சு வலியால் கீழே சரிந்தார். ஆபத்தான நிலையில் பெங்களூருவில் உள்ள 'விக்ரம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்த மருத்துவர்கள், உடனடியாக அதற்கான சிகிச்சையை துவங்கினர். பின்னர் அன்றைய மாலை, புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல், கர்நாடக மக்கள், கன்னட திரையுலகையும் தாண்டி பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்: சரிந்து விழும் சேலையை சரி செய்யாமல்... மெல்லிய இடையை காட்டி கவர்ச்சி ட்ரீட் வைத்த வாணி போஜன்! போட்டோஸ்..

 

உடல் நிலையில் அதிக அக்கறையோடு இருக்கும் புனீத் ராஜ்குமாரின் மரணத்திற்கு தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்கவும் துவங்கினர். பின்னர் அவருடைய உடல் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களாக அவருடைய உடலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய திரையுலகப் பிரபங்களும் புனீத் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கர்நாடக மாநிலத்தில் உள்ள, அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், திரையரங்குகளுக்கு மூடப்பட்டது.

மேலும் செய்திகள்: கடவுளே... இது என்ன கொடுமை! புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு கதறி அழுத பிரபலங்கள்!

 

புனீத் ராஜ்குமாரின் மூத்த மகள் திரிதி அமெரிக்காவில் படித்து வருவதால், அவர் இறுதி அஞ்சலி  மொத்தக் குடும்பமும் காத்திருந்தது. இதனிடையே அவர் அமெரிக்காவிலிருந்து நேற்று மாலை பெங்களூரு திரும்பினார். தன் தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். மகள் பெங்களூரு திரும்பியதால், ஞாயிறு காலை புனீத் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 5 மணியளவில் புனீத்தின் இறுதிச் சடங்குகள் தொடங்கின.

மேலும் செய்திகள்: அச்சு அசல் தாத்தா ரஜினிகாந்தை உரித்து வைத்தது போல் போஸ் கொடுத்த பேரன்..! வைரலாகும் புகைப்படம்..!

 

கன்டீரவா மைதானத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கன்டீரவா ஸ்டூடியோவுக்கு புனீத்தீன் உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு வரப்பட்டத. அங்கு அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் வினய் ராஜ்குமார் இறுதிச் சடங்குகளைச் செய்தார். மேலும் புனீத்தின் உடல் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அவருடைய தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மாள் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே புனீத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்: 'ரோஜா' சீரியல் நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி..! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!

 

புனீத் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. முக்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். புனீத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள காலை 4:30 மணிக்கே கன்டீரவா மைதானத்திற்கு வந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இறுதி ஊர்வலத்திற்கு முன்னர், புனீத் ராஜ்குமாரின் நெற்றியில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த நிகழ்வில்  முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!