இளம் பெண்களை ஆபாசமாக பேச வைத்து மிரட்டி பணம் பரிப்பில் ஈடுபட்ட நடிகர் அதிரடி கைது!

By manimegalai a  |  First Published Aug 15, 2022, 4:58 PM IST

இளம் பெண்களை ஆபாசமாக பேச வைத்து, ஹனி டிராப் முறையில் தொழிலதிபரிடம் பண பரிப்பில் ஈடுபட்ட கன்னட நடிகர் மற்றும் இரண்டு இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இளம் கன்னட நடிகர் யுவராஜ் தன்னுடைய தோழிகள் இருவருடன் சேர்ந்து,  ஹனி டிராப் முறையில் 73 வயது தொழிலதிபரை மிரட்டி தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால், நடிகர் யுவராஜ் உட்பட அவரது தோழிகளான கவானா மற்றும் நிதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கவானா, பணத்தை இழந்த தொழிலதிபரை கடந்த நான்கு ஆண்டுகளாக நன்கு அறிந்தவர். அவரது வீக்னஸ் என்ன என்பதை தெரிந்து வைத்து கொண்டு அவரிடம் பணம் பறிக்க இவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அதன் படி ஒரு வாரத்திற்கு முன்பு தொழிலதிபரிடம் தனது தோழி நிதியை கவானா அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் இருவரும் வாட்ஸ்அப் மூலம் ஆபாச சேட் செய்து வந்துள்ளனர். சில ஆபாச புகைப்படங்களும் பரிமாற்ற பட்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!
 

இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ம் தேதி குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டும் என கூறியுள்ளனர். தொழிலதிபர் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்ததும், ​​இருவர் அவருடைய காரை நிறுத்தி தங்களை சிறப்புப் பிரிவு போலீஸார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர் பகிர்ந்து ஆபாச வாட்டஸ் ஆப் சேட்டிங்கை காட்டி மிரட்டி பணம் வேண்டும் என கேட்டுள்ளனர். தன்னுடைய கௌரவத்திற்கு அஞ்சி தொழிலதிபர் முதலில் 3.4 லட்சமும், பின்னர் 6 லட்சமும் குற்றவாளிக்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
 

பின்னர், அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்களை குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி மேலும் ஐந்து லட்சம் பணம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் வந்ததால், தொழிலதிபர் ஹலசுரு கேட் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்க்கு பின்னால்  உள்ள நடிகர் யுவராஜை போலீசார் கைது செய்தனர். இவருக்கு துணையாக செயல்பட்ட தோழிகளான கவானா  மாற்று நிதி ஆகிய இரண்டு இளம் பெண்களையும் போலீசா கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!